வீட்டு உரிமையாளர் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016-ன் பிரிவு 18
🔥 வீடு கட்ட தாமதம்.. கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.70 லட்சம் அபராதம்.. இந்த சட்டம் பற்றி தெரியுமா..?
பெங்களூருவில் ஒருவர், தனது கனவு வீட்டை நிறைவேற்றும் எண்ணத்தில், ஒரு கட்டுமான நிறுவனத்தை அணுகி அவர்களுடன் ஒப்பந்தம் செய்து, முழுத் தொகையையும் செலுத்தியுள்ளார். ஆனால், அந்த நிறுவனமோ தனது பொறுப்புகளை தவறவிட்டுவிட்டு, தாமதம் செய்து வந்ததால், வாடிக்கையாளர் மன அழுத்தத்திற்கும், பொருளாதார நெருக்கடிகளிலும் சிக்கிக் கொண்டார். பின்னர், இதுதொடர்பாக தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பு தான் தற்போது அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது.
பெங்களூருவில் சொந்த வீடு வாங்க ஆசைப்பட்ட ஒருவர், கட்டுமான நிறுவனத்தை அணுகி, வீட்டுக்கான முழுத் தொகையும், அதாவது ரூ.51 லட்சத்தை நிதி நிறுவனம் மூலம் கடன் பெற்று கொடுத்துள்ளார். இதுதான் அவர் செய்த மிகப்பெரிய தவறு. இந்த வீடு பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே அமையவுள்ளது. இது ஒரு அபார்ட்மெண்ட் ஆகும். பணம் வாங்கியதும் வீட்டை கட்டி முடித்து சாவியை ஒப்படைப்பதற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
ஆனால், 3 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டுமானப் பணி முடியவில்லை. முன்னதாக, கடந்த 2021ஆம் ஆண்டே வீடு முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும் என கட்டுமான நிறுவனத்தினர் வாக்குறுதி அளித்துள்ளார். ஆனால், 2024ஆம் ஆண்டுக்குள் வீட்டை கட்டி முடிக்க முடியவில்லை. இதனால், தான் ஏமாற்றப்பட்டதாக கருதி, பெங்களூருவை சேர்ந்த அந்த வீட்டு உரிமையாளர், சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு எடுத்தார்.
வீட்டு உரிமையாளர் ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு) சட்டம், 2016-ன் பிரிவு 18ன் கீழ் தனது உரிமைகளை பயன்படுத்தி, கர்நாடகா RERA தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், கட்டுமான நிறுவனத்திற்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதாவது, வீட்டு உரிமையாளரிடம் பெற்ற ரூ.51 லட்சத்தையும் திருப்பி செலுத்த வேண்டும் என்றும் கூடுதலாக ரூ.19 லட்சம் வட்டியும் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. குறிப்பாக, மொத்தம் ரூ.70 லட்சத்தை இரண்டு மாதங்களில் திரும்பித் தர வேண்டும் என கூறியுள்ளது. இந்த தீர்ப்பு வீட்டு உரிமையாளருக்கு சாதகமாக அமைந்ததற்கு முன்னதாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பே முக்கிய காரணமாக அமைந்தது.
அதாவது, வீடு வழங்குவதில் கட்டுமான நிறுவனங்கள் ஏதேனும் தவறுகள் செய்தால், வாடிக்கையாளர்கள் RERA-வின் பிரிவு 18 அல்லது அதன் துணை பிரிவுகள் மூலம் சட்ட உரிமைகளை பயன்படுத்தலாம். இந்த வழக்கில் தற்போது அந்த வீட்டு உரிமையாளர் பிரிவு 18-ஐ பயன்படுத்தியுள்ளதால், அவருக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பில் தீர்ப்பாயம் கூறியதாவது; "விற்பனை ஒப்பந்தம் மற்றும் மூன்று பக்க ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட காலக்கெடு முடிந்தும், கட்டுமான நிறுவனம் வீடு வழங்கவில்லை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதேபோல், கட்டுமான நிறுவனம் திட்டத்தின் தற்போதைய நிலையை குறித்து எந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்யவில்லை. வெறும் எழுத்துப்பூர்வ விளக்கம் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. வீடு வாங்குபவர் வங்கி மூலம் கடன் பெற்று கட்டுமான நிறுவனத்துக்கு முழு தொகையையும் செலுத்தியுள்ளார். ஆனால், இந்த வழக்கில் ஒப்பந்த விதிகளை கட்டிட நிறுவனம் மீறியுள்ளது. தனது அந்த வாடிக்கையாளருக்கு ரூ.51 லட்சத்தையும், அதனுடன் வட்டியும் சேர்த்து மொத்தம் ரூ.70,33,424 தர வேண்டும்" என கட்டுமான நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தொகை, 01.05.2017 முதல் 26.06.2025 வரையிலான காலத்திற்கு வாங்குபவர்கள் தரப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது. 27.06.2025 முதல் இறுதி கட்டண தேதி வரை வரும் வட்டியும் கணக்கிட்டு கட்டிட நிறுவனம் செலுத்த வேண்டும். அதேபோல் புதிய வட்டி, இறுதி கட்டணம் செலுத்தும் நாள் வரை சேர்க்கப்படும் என்றும் தீர்ப்பாயம்
0 Comments