Can partition suit be initiated in civil court after Sarfaesi proceedings

 *சர்பாசி நடவடிக்கை தொடர்ந்த பின்பு உரிமையியல் நீதிமன்றத்தில் பாகப்பிரிவினை கோரி வழக்கு தாக்கல் செய்ய இயலுமா?*


*கதை சுருக்கம்:*


தாவா சொத்தை பொருத்து வாதியின் தந்தையால் வங்கியில் அடமானம் வைத்து கடன் பெற்றுள்ள சூழ்நிலையில் அவர்கள் கடன் தொகையை முறையாக செலுத்தாத காரணத்தினால் மேற்படி கடன் கணக்கானது வராத கணக்காக உள்ள சூழ்நிலையில் வங்கியின் தரப்பில் சர்பாசி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுது வாதிகள் தாங்கள் இளவர் என்றும் மேற்படி தாவா சொத்து பிதுராஜித வகையில் பாத்தியப்பட்ட சொத்து என்றும் அதனால் தங்களுக்கு உரிமை உள்ளது என்றும் கோரி தாவா சொத்தில் பாகப்பிரிவினை கேட்டு வழக்கு தாக்கல் செய்தனர். மேற்படி வழக்கானது சர்பாசி சட்டத்தின் அடிப்படையில் உரிமையியல் நீதிமன்றங்கள் விசாரிக்க தடை உள்ளதாக குறிப்பிட்டு கட்டளை 7 விதி 11 இன் கீழ் மேற்படி வழக்கினை நிராகரித்து உத்தரவிடக்கோரி தாக்கல் செய்த மனுவினை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.


*வழக்கு விவரம்:*


நிராகரிக்க வேண்டிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பிரதிவாதி தரப்பில் மேற்படி உத்தரவினை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சீராய்வு மனுவான *ஐடிபிஐ வங்கி சேலம் கிளை -எதிர்- இளவர் ஸ்ரீஹரி ஆதர்ஷ் மற்றும் ஆறு நபர்கள்* என்ற வழக்கினில் ஆராய்ந்த சென்னை உயர்நீதிமன்றம் மேற்படி வாதி தரப்பில் எடுத்து வைக்கப்பட்ட வாதங்களான இந்து வாரிசுரிமைச் சட்டம் சட்டப்பிரிவு 6( 4 ) படி தந்தை வாங்கிய கடனுக்கு மகன் பொறுப்பல்ல என்றும் அது இளவர்களின் சொத்துக்களை கட்டுப்படுத்தாது என்றும் எனவே அவர்கள் உரிமை கோர உரிமை உடையவர்கள் என்றும் மேலும் இந்த வழக்கானது பாகப்பிரிவினை கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு என்றும், பாகப்பிரிவினை குறித்து கடன் வசூலிப்பு தீர்ப்பாயம் முடிவு செய்ய இயலாது என்றும் மேற்படி சர்பாசி சட்டம் சட்ட பிரிவு 34ன் கீழ் பாதிப்புக்கு உள்ளாகும் விடயங்களை பொருத்து மட்டுமே தனியாக உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர இயலாது என்றும், அதைத் தாண்டி கடன் தீர்ப்பாயத்தால் முடிவு செய்ய இயலாத விடயங்களை பொறுத்து உரிமையியல் நீதிமன்றங்களில் தான் வழக்கு தொடர வேண்டும் என்றும் அதனால் இந்த வழக்கு உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்வதில் எந்த ஒரு இடர்பாடுகளும் இல்லை என்றும் விசாரணை நீதிமன்றம் மேற்படி மனுவினை தள்ளுபடி செய்தது ஏற்புடையது என்றும் வழக்கு நடத்துவதற்கு வாதிக்கு எந்த ஒரு தடையும் இல்லை என்றும் குறிப்பிட்டு உத்தரவிட்டுள்ளது.


*சென்னை உயர்நீதிமன்றம்*


C.R.P. No.3315/2018


*IDBI bank Salem branch _Vs_ Minor Srihari Adharsh and 6 others*


Dt. 27.09.2023


#2024(1) CTC158

Post a Comment

0 Comments