*சில முக்கிய தீர்ப்புகள்*
1. அடையாள அணிவகுப்பு காலதாமதமாக நடத்தப்பட்டால் அது செல்லாது *(அரிநாத் எதிர் உ.பி. அரசு AIR 1988 SC 345)*
2. காவல் நிலையத்தில் எதிரியை சாட்சியிடம் அடையாளம் காட்டினால் செல்லாது *(அகமது பின் சலீம் எதிர் ஆந்திர அரசு AIR 1999 SC 1617)*
3. புகைப்படம் நாளிதழ்களில் வெளியான பின் நடைபெறும் அடையாள அணிவகுப்பு செல்லாது. *(ரவிந்திரா எதிர் மகராஸ்ட்ரா அரசு AIR 1998 SC 3031)*
4. எல்லா வழக்குகளிலும் எதிரிகள் கைது செய்ய வேண்டியது இல்லை. *(ஜோகீந்தர்குமார் எதிர் உ.பி. அரசு 1994 Crl LJ 1981)*
5. கைது செய்யப்பட்டவருக்கு நடுவர் உத்தரவு இல்லாமல் கைவிலங்கிடக் கூடாது *(ஜனநாயகத்திற்கான குடிமக்கள் அமைப்பு எதிர் அசாம் அரசு 1995 (3) SCC 743)*
6. பிணையில் வந்தவரின் பிடி ஆணை திரும்பப்பெற அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தேவையில்லை. *(வலியுலார் செனிட் எதிர் நல்லூர் சா.நி. 2000(3) MWN Cr 28)*
7. பிணையில் வந்தவர் வேறு வழக்கில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டால் முதல் வழக்கில் தொடர்ந்து சிறையில் வைக்கக்கூடாது *(அப்பு (எ) சாந்தகுமார் எதிர் தமிழக அரசு [2004 (1) TNLR 599 (Mad)]*
8. குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்படாவிட்டால் 60 நாள் அல்லது 90 நாள் முடிந்தவுடன் பிணை வழங்க வேண்டும். *(முகமது காமில் எதிர் ஆய்வாளர் சிறப்புப் புலனாய்வு (2000 (1) MWN Cr 70)*
9. இலவச சட்ட உதவி பெறுவது அவரின் அடிப்படை உரிமை. *(காட்ரி எதிர் பிகார் அரசு AIR 1981 Sc 928)*
10. சிறைக் கைதிகளுக்கு அடிப்படை உரிமைகளை அனுபவிக்க உரிமை உண்டு. *சுனில்பட்ரா எதிர் டெல்லி (AIR 1980 Sc 1579), (ராமமூர்த்தி எதிர் கர்நாடகா அரசு AIR 1997 Sc 1739), (அரசு எதிர் சாருலா சோகி AIR 1999 SC 1379)*
11. கைது செய்யப்பட்டவர் 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் நிருத்தப்படாவிட்டால் அது சட்டவிரோதம். *(பிரவீன்குமார் சந்திரகாந்த் எதிர் குஜராத் அரசு 2002 (1) Crime 277)*
12. கைது செய்யப்பட்ட முதல் 15 நாட்களுக்குள் மட்டுமே காவல்துறை காவலில் விசாரிக்க முடியும். *(சி.பி.ஐ. எதிர் அனுபம் குல்கர்னி AIR 1992 SC 1768)*
13. பிணை பெற்றவர் பிணையதாரரை நீதிமன்றத்தில் முன்னிலைப் படுத்தும் போது அதனை ஏற்கும் நீதிமன்றம் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும். பிணையதாரர் பற்றி விசாரிக்க வேண்டும் என்பதற்காக ஒரு நபரை தொடர்ந்து சிறையில் வைக்கக் கூடாது. *ராஜஸ்தான் அரசு எதிர் லால்சிங் 1987 Crl. LJ 269)*
14. சிறைக் கைதியை அவரின் உறவினரோ, நண்பரோ பார்க்க அனுமதி மறுக்கக் கூடாது. *நெடுமாறன் எதிர் தமிழ்நாடு அரசு *2001 (2) LW Crl 805)
0 Comments